யாழ்.மாநகரில் கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு குறித்து ஆராய்வு!

Friday, November 11th, 2016

யாழ்.மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வதால் யாழ்.நகரம் துர்நாற்றம் வீசுகின்ற நிலையில், கழிவகற்றலுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன என யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதாரத் தொழிலாளர்கள் அனைவரும் ஒரே தடவையில் நிரந்தர நியமனம் வழங்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம். எங்களிடம் உள்ள ஆளணிக்கேற்ப படிப்படியாகவே நிரந்தர நியமனம் வழங்க முடியும். இந்த நிலைப்பாட்டுக்கு சுகாதாரத் தொழிலாளர்கள் இணங்கினால் நாளையே (இன்று) நாங்கள் முதற்கட்டமாக 15 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியும். அவர்களுக்கு அது பற்றித் தெரிவித்தோம். அவர்கள் அதற்கு இணங்கவில்லை. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் கழிவுகள் தேங்கியிருப்பதால் தாங்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக இங்குள்ள திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எங்களுக்கு நேரடியாகவும், கடிதம் தொலைபேசி வாயிலாகவும் முறைப்பாடு செய்து வருகின்றனர். இதனால் கழிவகற்றலுக்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம் – என்று மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

protest-3

Related posts: