யாழ்.மாநகரில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் – பேருந்து சேவைகளும் 8 மணிவரை இடம்பெறும்!

Friday, April 9th, 2021

யாழ்.மாநகர வர்த்தக நிலையங்கள் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் எனவும் 10 மணிவரை மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் யாழ்.வணிகர்கழகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் யாழ்.மாநகர பகுதியிலிருந்து இரவு 8 மணிவரை இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவல் காரணமாக யாழ்.மாநகரம் முடக்கப்பட்டு நேற்று கடும் சுகாதார நடைமுறைகளுடன் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் நன்மை கருதியும், சித்திரை புத்தாண்டை ஒட்டியும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் யாழ் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சங்குப்பிட்டியை அபகரிக்கும் வனவளத் திணைக்களத்துறை - குற்றச்சாட்டுகின்றனர் கடற்றொழிலாளர்கள்!
அதிபர், ஆசிரியர் இடமாற்றங்களில் பாரபட்சம் இடம்பெற அனுமதிக்க முடியாது - வடக்கு மாகாண ஆளுநர், ஆசிரியர...
இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்கு...