யாழ். மாநகரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்க வேண்டும்  – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் V.K ஜெகன்!

Tuesday, June 26th, 2018

யாழ் நகர எல்லைக்குட்பட்ட இடங்களிலும் முக்கியமான பகுதிகளிலும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு யாழ் நகரில் ஏற்படுகின்ற குற்றச் செயல்களையும் சமூக சீரழிவுகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினரமான கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரின் அமர்வு நேற்றையதினம் நடைபெற்றபோதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மாநகரசபையின் நிதிக்குழுவிற்கு பக்கபலமாக நிதிவிதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். அத்துடன் யாழ் மாநகரசபைக்குட்பட்ட மீன் சந்தைகளில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்திகொண்டு செல்லும்போது கழிவுகளில் இருந்து நீர் கொட்டப்பட்டு அதிலிருந்து துர்நாற்றம் வீசுகின்றது இதை மக்களின் நலன்கருதி கருத்திலெடுத்து தீர்வு காணப்பட வேண்டும்.

மேலும் அரசகாணி, தனியார்காணி, கோயிற்காணி போன்றவற்றில் குடியிருக்கும் மக்களுக்கு சோலைவரி செலுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும். பாஷையூர் பகுதிகளில் உள்ள மாநகரசபைக்கு சொந்தமான காணியில் 7 குடும்பங்கள் பலவருடகாலமாக வசித்துவருகின்றர். அவர்களுக்கு நிரந்தரமான காணி உறுதி வழங்கப்படல் வேண்டும்.

யாழ் மாநகரசபை மக்களுக்கு விநியோக்கிக்கப்படும் குடிநீர் (மடத்தடிபிரதானவீதி)  தாங்கி பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் காணப்பபடுகின்றது. இதனால் விநியோகிக்கப்படும் நீரானது பல இடங்களுக்கு சென்றடைவதில்லை. இதன் காரணமாக இத்தாங்கி முழுமையாக புனரமைக்கப்படவேண்டும்.

யாழ் பஸ்தரிப்பு நிலையத்திலும் பலமுக்கிய இடங்களிலும் மலசலகூடவசதிகள் அற்று காணப்படுகின்றன. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்துவரும் பயணிகள் அண்மைக் காலமாக தங்கள் அவசர தேவைகளை வீதியோரங்களில் கழிக்கின்றனர். இதில் பெண்கள் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடிதீர்வாக தற்காலிமாக மூடப்பட்டுள்ள மலசலகூடம் உடனடியாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்படவேண்டும். மேலும் இரண்டு அல்லது மூன்று மலசலகூடங்கள் மேலதிகமாக அமைக்கப்படவேண்டும்.

மின்கம்பவீதிவிளக்குகள் அதிதொழிநுட்பமும் பிரகாசமும் கூடியமின்விளக்குள் மாநகரசபைக்குள் அமைக்கப்படவேண்டும்.

ஆறுகால்மடம் பகுதிகளில் குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு குழாய் நீர் விநியோகம் செயற்படுத்தப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பிரேரணைகளுடன் சர்வதேச குற்றவிசாரணைகள் சம்மந்தமாக மணிவண்ணனால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் 1998,1999ம் ஆண்டு மாநகரசபையினால் தனிநாட்டுக்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  அந்தவிடயத்தினை இன்று வெறுமனே ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், கமராக்களுக்கும் மட்டுமே இந்தபிரேரணைகொண்டு வரப்படுகின்றது. ஆனால் இதற்கு எங்களுடைய ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார்.

திலீபனுக்குசிலைவைப்பது தொடர்பாககொண்டு வரப்பட்ட பிரேரணையில் திலீபனுக்கு மட்டுமல்ல கொல்லப்பட்ட அனைத்து இயக்க தலைவர்களுக்கும், மிதவாத தலைவர்களுக்கும் சிலை அமைக்கப்படவேண்டும்  என்று வலியுறுத்தினார்.

இலங்கை போக்குவரத்து சாலைக்குள் இயங்கும் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கூடாது எனவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத அளவு செயற்படவேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: