யாழ் மாநகரின் நிர்வாகத்தில் யாரும் தலையிட முடியாது – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!

Tuesday, May 29th, 2018

யாழ் மாநகரசபை முன்னெடுக்கும் விடயங்களில் எதிர்க்கவோ தடுத்து நிறுத்தவோ உள்ளூராட்சி  அமைச்சர் என்ற அடிப்படையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. முதல்வர் மட்டுமன்றி வேறு எவரும் யாழ் மாநகரின் நிர்வாகத்தில் தலையிடவும் முடியாது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நடைபெற்ற யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் கலந்துகொண்டு கத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாங்கள் நினைத்த எல்லாவற்றையும் செய்யலாம் என்று நினைக்கக்கூடாது.மாகாண சபையின் கீழ் உள்ளூராட்சி மற்றங்கள் இருந்தாலும் யாழ் மாநகரசபை சட்டத்திற்கு உட்பட்டு எமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் யாருடைய இடையூறும் தடைகளும் இன்றி எங்களால் செயற்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம் உள்ளது.

இதன்படி மாநகர நிர்வாகத்திற்கு எதிரான மனு உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சருக்கு கையளிக்கப்பட்டால் அதன் பதில் வரும் வரைக்கும் நாங்கள் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. அந்த முறைப்பாடு தொடர்பில் மாநகரசபை கருத்தில் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

மாநகர சபையிலுள்ள 45 உறுப்பினர்களும் ஒரு முடிவினை எடுத்தால் அல்லது 23 உறுப்பினர்கள் ஒரு விடயத்திற்கு ஆதரவு வழங்கினால் அந்த விடயத்தை செய்யவிடாமல் தடுப்பதற்கு முதலமைச்சர் யார்? சட்டத்தின் படி எமக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. முதலமைச்சராக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் எங்களுடைய சபைக்கு ஆலோசனை தருவது அவர்களுக்கு தேவையற்ற விடயம் என்றார்.

Related posts:

ஏழை மக்களது வாழ்வியல் விடியலுக்காக உழைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியின் யாழ்ப்ப...
பசுமை விவசாய கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் - அமைச்சர் வி...