யாழ் மாநகரின் கல்வி மற்றும் விளையாட்டு நலன்புரி குழுவின் தலைவராக ஈ.பி.டி.பியின் உறுப்பினர் இரா.செல்வவடிவேல் நியமனம்!

யாழ் மாநகர சபையின் கல்வி மற்றும் விளையாட்டு நலன்புரி குழுவின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர உறுப்பினரான இரா.செல்வவடிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையின் நிலையியல் குழுக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் விசேட அமர்வு இன்றையதினம் யாழ் மாநகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த அமர்வின்போது நிதிக்குழுவின் உறுப்பினராக யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், மாநகர சபையின் உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவு செய்யப்பட்டிருந்தார். மராமத்து குழுவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் துரைராஜா இளங்கோ (றீகன்), நிக்கிலாப்பிள்ளை பிலிப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனிடையே சுகாதார விவகாரக் குழுவின் உறுப்பினராக செபமாலை சத்தியசேகரனும், சமயம் மற்றும் கலாசார விவகார குழுவின் உறுப்பினர்களாக கிரேஸியன் டேமியன்,, வேலும் மயிலும் குகேந்திரன் (ஜெகன்) ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.
அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார குழுவின் உறுப்பினராக திருமதி ஜெயந்தினி நாகேஸ்வரனும் , கல்வி மற்றும் விளையாட்டு நலன்புரிக் குழுவின் தலைவராக இரா.செல்வவடிவேல் தெரிவுசெய்யப்பட்டிருந்த அதேவேளை உறுப்பினராக திருமதி அனுசியா சந்திரகுமார் ஏற்கனவே தெரிவாகியிருந்தார்.
நிலையியற் குழுக்களின் உறுப்பினர்கள் கடந்த அமர்வின் போது தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், யாழ். மாநகர சபையின் நிலையியற் குழுக்களின் தலைமைகளை தெரிவு செய்யும் விசேட கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. நிதிக்குழு தவிர்ந்த ஏனைய குழுக்களின் கூட்டங்கள் இன்றையதினம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|