யாழ் மாநகரின் உள்ளக வீதிகளில் காணப்படும் வாய்க்கால்களை சீரமைத்து நகரின் சுகாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர்  அனுஷியா!

Tuesday, June 26th, 2018

யாழ் மாநகருக்குட்பட்ட உள்ளக வீதிகளில் காணப்படும் கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைத்து நகரின் சுத்தம் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைப்பாடுகளை துரிதகதியில் சீரமைக்க முன்னுரிமை அடிப்படையில்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி சந்துரு அனுஷியா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாநகரின் அமர்வு நேற்றையதினம் நடைபெற்றபோதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ் வீதி மற்றும் சிறாம்பையடி வீதிகளில் காணப்படும் கழிவுநீரகற்றும் வடிகால் சீரமைக்கப்படாதுள்ளமையால் கழிவு நீர் வழிந்தோட முடியாது தேங்கிக் கிடக்கும் நிலை உருவாகின்றது.

அத்துடன் சிறாம்பையடி வீதியிலுள்ள கழிவு நீர் வாய்க்கால் மதகு பாரிய சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகின்றது. குறித்த வாய்க்கால் தூர்வாராமை காரணமாக கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது.

இத்தகைய நிலை நீடித்துவருவதால் குறித்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நுளம்புகளின் பெருக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே குறித்த வீதிகளில் காணப்படும் வாய்க்காலை சீரமைத்து சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் பலாலி வீதி 2 ஆம் ஒழுங்கை, நாவலர் வீதி, கலைப்புலவர் வீதி போன்ற வீதிகளும் முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: