யாழ் மாநகரசபை விவகாரம்: ஈ.பி.டி.பி ஆதரவு – முதல்வர் ஆர்னோல்ட் ஆறுதல்!

Wednesday, May 30th, 2018

யாழ் மாநகரின் செயற்பாடுகளுக்கான குழுக்கள் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரே சபையின் அனுமதி இல்லாமல் கேள்வி விண்ணப்பங்கள் முதல்வரால் கோரப்பட்டமை தொடர்பில் தமிழ்தேசிய முன்னணியின் மாநகர உறுப்பினர் மணிவண்ணனால் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சருக்கு வழங்கிய முறைப்பாடு தொடர்பில் யாழ் மாநகரின் விசேடஅமரிவில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.

இதன்காரணமாக யாழ் மாநகர சபையின் செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குறித்த விவாதம் தொடர்பில்எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டை அடுத்து முதல்வர் ஆர்னோல்ட் தனக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து தப்பித்துக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது  –

கடந்த 28.05.2018 அன்று யாழ்.மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் சபைக்கான குழுநிலைகளை அமைப்பதற்கு முன்னரே தன்னிச்சையாக செயற்பட்டு முறைகேடுகள் செய்தார் எனக் குற்றம்சாட்டி முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு மணிவண்ணனால் எழுதப்பட்ட கடிதம் தொடர்பிலான விவாதம் நடைபெற்றது.

இதன்போது ஆர்னோல்ட் செயற்பட்ட விதம் மாநகர விதிமுறைக்கு விரோதமானது என தெரிவித்து மாநகரின் செயற்பாடுகளை முடக்குவதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய முன்னணி தரப்பு பிரதிநிதிகள் முன்னெடுத்திருந்தனர்.

ஆனாலும் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகளை முன்னிறுத்தி தனது செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் அந்த முறைப்பாடு தொடர்பில்கருத்து பதிவிடுகையில் முதல்வர் ஆர்னோல்ட் மேற்கொண்ட விடயம் சரியானதாக இருக்காதுவிடினும் அதை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று முறையிடுவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அத்துடன் முதல்வர் விக்னேஸ்வரன் மட்டுமன்றி வேறு எவரும் யாழ் மாநகரின் நிர்வாகத்தில் தலையிடவும் முடியாது யாழ் மாநகரசபை முன்னெடுக்கும் செயற்பாடுகளை எதிர்க்கவோதடுத்து நிறுத்தவோ அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. அத்துடன்  தாங்கள் நினைத்த எல்லாவற்றையும் செய்யலாம் என்று நினைக்கக்கூடாது.

மாநகரசபை சட்டத்திற்கு உட்பட்டு எமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் யாருடைய இடையூறும் தடைகளும் இன்றி செயற்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம்எங்களுக்கு உள்ளது.

இதன்படி மாநகர நிர்வாகத்திற்கு எதிரான மனு உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சருக்கு கையளிக்கப்பட்டால் அதன் பதில் வரும் வரைக்கும் நாங்கள் காத்திருக்கவேண்டிய தேவையும் கிடையாது. அந்த முறைப்பாடு தொடர்பில் மாநகரசபை கருத்தில் கொள்ள வேண்டிய தேவையும்  இல்லை.

மாநகர சபையிலுள்ள 45 உறுப்பினர்களும் ஒரு முடிவினை எடுத்தால் அல்லது 23 உறுப்பினர்கள் ஒரு விடயத்திற்கு ஆதரவு வழங்கினால் அந்த விடயத்தை செய்யவிடாமல் தடுப்பதற்குமுதலமைச்சர் யார்?

சட்டத்தின் படி எமக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. முதலமைச்சராக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும்எங்களுடைய சபைக்கு ஆலோசனை தருவது அவர்களுக்கு தேவையற்ற விடயம்.

அத்துடன் யாழ் மாநகர சபையால் செயற்படுத்தப்படுகின்ற மக்களுக்கான செயற்றிட்டங்களை யாரும் தமது தனிப்பட்ட செயற்பாடாக உரிமைகோர முடியாது. அவ்வாறு செயற்படும் போக்கைசில உறுப்பினர்கள் கொண்டுள்ளமையானது ஏனைய சபை உறுப்பினர்களை அவமதிப்பதாக உள்ளது.

எனவே யாழ் மாநகர சபை சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த உயரிய அவையிலேயே விவாதிக்கப்பட்டு அதற்கானமுடிவுகள் காணப்படவேண்டுமே தவிர அதனை மாகாணசபையிடம் முறையிட்டு தீர்ப்பதற்கு முயற்சிப்பது இந்த சபையின் அதிகாரத்தை கீழ்மைப்படுத்துவதாக உள்ளது எனவலியுறுத்தியிருந்தனர்.

இதன்காரணமாக குறித்த விடயம் தொடர்பில் எழுந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதுடன் முதல்வர் ஆர்னோல்ட் தனக்கு வரவிருந்த ஆபத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டார்.

Related posts:

இஷட் புள்ளி இன்றையதினம் இணையத்தளத்தில் வெளியாகும் - பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவ...
2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது- நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடா...
அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப கைதிகளை விடுவிக்க முடியாது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!