யாழ்.மாநகரசபை சுகாதார தொண்டா்கள் போராட்டம்!

Wednesday, January 22nd, 2020

யாழ்.மாநகரசபை சுகாதார தொண்டா்கள் இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.மாநகரசபை முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

அத்துடன் நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் தாம் கோரியுள்ள நிலையில் நியமனம் வழங்கப்பட்டால் இழுத்தடிக்கும் நிலைமைகள் உள்ளது.

சுகாதார தொழிலாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் கேட்டிருக்கிறோம். எனினும் அதுவும் செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறோம்.

இந்நிலையில் அவற்றினை நிவர்த்தி செய்யுமாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதும் இதற்கான நடவடிக்கைகளை மாநகர சபை செய்து கொடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரண்மாகவே தாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த அவர்கள் ,ஆகவே எமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான தீர்வுகளை மாநகரசபை வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் துறைசார் தரப்புக்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாதுபோனால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: