யாழ் மாநகரசபை அதிரடி நடவடிக்கை!

Thursday, March 14th, 2019

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட வர்த்தக விடுதிகள், தங்குமிடங்கள், பிரத்தியேக தங்குமிட வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவற்றை இதுவரை பதிவு செய்யாதவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை அந்த அறிவித்தல் முழுமையாக பின்பற்றப்படாமை கண்டறியப்பட்டுள்ளமையினால் மீண்டும் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

31 ஆம் திகதிக்கு பின்னர் பதிவு செய்யப்படாத நிலையங்கள் இருக்குமானால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவியுங்கள்!
3225 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம்!
இலங்கையின் கடலில் காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி தீவிரம்!
வீதியால் சென்றவர்களுடன் சேஸ்டையில் ஈடுபட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்!
மாசி முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை தேசிய கொடியை பறக்கவிடுமாறு  அறிவுறுத்தல்!