யாழ். மாணவருக்கு ‘மாவா’ என்ற பெயரில் போதைப் பொருட்கள் விநியோகம்!

Thursday, May 31st, 2018

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ‘மாவா’ என்ற பெயரில் போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக யாழ் நீதவான் நீதிமன்றம்அறிவுறுத்தியுள்ளது.

மாவா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் புகையிலை மற்றும் வாசனைத் திரவியங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்த்தகரொருவர் தன்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் மாவா விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் விளக்கமறியல் காலம்,எதிர்வரும்  ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை தலா 2 கிலோ மாவாவுடன் கைது  செய்யப்பட்ட இரண்டு பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts: