யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோர்க்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக இன்றிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சை நிலையத்தில் கிளினிக் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்களை தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
எனவே இன்றிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துப் பொருட்களை 021 221 4249 / 021 222 2261 / 021 222 3348 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தபால் மூலம் வீடுகளில் இருந்தவாறு தமக்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள அவர் பொதுமக்கள் குறித்த செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|