யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை – பணிப்பாளர்!

Tuesday, March 31st, 2020

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இராணுவச்சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள், பருத்தித்துறை மூதாட்டி உள்ளிட்டவர்கள் கொரோனா சந்தேகத்தில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அண்மையில் கண்டி அக்குரண பகுதியில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். குறித்த நபர் டுபாயிலிருந்து வந்த என தெரிவிகபப்ட்டிருந்த நிலையில், பின்னர் அவரது தந்தை சகோதரி ஆகியோர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருந்தனர்.

Related posts:


வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சிக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற ஆட்சியாளர்களே காரணம் – வடக்கு மாகாண...
QR குறியீட்டு முறைமையூடாக இதுவரை 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவு - 801 நிரப்பு நிலையங்களில் QR முறைமைய...
8000 பேருக்கு சம்பளம் வழங்கினால் நாடு மீண்டும் அதலபாதாளத்திற்கு செல்லும் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜி...