யாழ் போதனா வைத்தியசாலையிலும் சர்ச்சைக்குரிய கோபுரங்கள்!

Wednesday, July 10th, 2019

யாழ்.குடாநாட்டில் சர்ச்சையை உண்டாக்கியிருக்கும் தொலைதொடர்பு கோபுரங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்த யாழ்.போதனா வைத்தியசாலை ஆவணப்படுத்தவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் மட்டுமன்றி மாவட்டம் முழுமையாக தற்போது குறித்த வகை கம்பங்கள் பொருத்தப்படுவதனால் இதன் மூலம் வைத்திய ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படும் அதே நேரம் சிறுவர்கள் மற்றும் கர்ப்பவதிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது.

இந்த அச்சம் ஏற்படுவதாக பலரும் தொடர்பு கொண்ட நிலையிலேயே இதனை ஓர் ஆய்விற்கு உட்படுத்தும் நோக்கில் போதனா வைத்தியசாலையில் பல தரப்பட்ட வைத்திய நிபுணர்களும் உள்ளமையினால் இதனை ஓர் மக்கள் நன்மை கருதியவிடயமாக மேற்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இதுவரை மேற்கொண்ட தேடல்களின் அடிப்படையில் பாதிப்பு உள்ளதாக கூறப்படும் எந்த தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை என்றும், அதனால் தொடர்ந்தும் தேடல்களும் ஆய்வுகளுமே இடம்பெறுகின்றதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார் .

இதேநேரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உள்ளே முக்கிய சத்திர சிகிச்சைக் கூடங்கள் மற்றும் கட்டிடங்களில் போதிய அலைவரிசைகள் இன்மை காரணமாக அவற்றினை பொருத்தி தருமாறு தாம் விடுத்த கோரிக்கையின் பெயரில் வைத்தியசாலையின் உள்ளே சிகிச்சை கூடங்களில் 5 சிறிய வகை பூஸ்ரர் அன்ரனாக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வெறுப்பு ஏற்படுவதற்காகவே சிகரட் மீது வரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது - ஜனாதிபதி!
  வைத்தியர் பாலித மஹிபால உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக நியமனம்!
அரிசி குறித்து விசேட அறிவிப்பு!
அடையாள பணிப்புறக்கணிப்பில் அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் !
இன்று கடமைக்கு திரும்பும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள்!