யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைவில் எம்.ஆர்.ஐ.ஸ்கானர் – அமைச்சர் ராஜித!

Wednesday, July 18th, 2018

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விரைவில் எம்.ஆர்.ஐ.ஸ்கானர் ஒன்றை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடமாகாண மருத்துவர் மன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் வடமாகாண மருத்துவர் மன்றம் நடத்திய சந்திப்பின்போது வடபகுதி சுகாதாரத்துறை தொடர்பாக மிக விரிவாக ஆராயப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கானர் ஒன்று வழங்கப்பட வேண்டுமென வடமாகாண மருத்துவர் மன்றம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் விரைவில் அதனை வழங்குவதாக இந்தச் சந்திப்பில் அமைச்சர் ராஜித உறுதியளித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு இந்த ஸ்கானரை வழங்குவதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதாகவும் இந்த ஸ்கானர் இறக்குமதி செய்யப்பட்டதும் உடனடியாக அதனை யாழ் போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

Related posts: