யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Thursday, May 12th, 2016

யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

இதன்படி, காந்த ஒத்திசைவு படமெடுத்தல் (MRI scanner) மற்றும் கணினி வரைவி படமெடுத்தல் (CT scanner) போன்ற ரூபா 100 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை யாழ் போதனாவைத்தியசாலைக்கு வழங்க இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் கலந்துக் கொள்வதற்காக 60 சுகாதார ஊழியர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: