யாழ் போதனாவில் குழந்தை கடத்தல் – நீதவான் நீதி மன்று உத்தரவு!

Tuesday, March 27th, 2018

யாழ் .போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை கடத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நீதி மன்றில் முற்றுப்படுமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதி மன்று உத்தரவிட்டுள்ளது.

வல்வெட்டித்துறை கரணவாய் பகுதியைச் சேர்ந்த பெண்னொருவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாத காலப்பகுதியில் பிரசவத்திற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவரிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும் மகப்பேற்று நிபுணர்களின் உதவியுடன் தன்னுடைய ஒரு குழந்தை கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகள் நீண்ட காலம் இடம் பெற்று தற்போது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம் பொற்று வருகின்றது. கடந்த வழக்குத் தவணையின் போது இந்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பாரப்படுத்துமாறும் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.

எனினும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வுப் பிரிவினார் மன்றில் தோற்றவில்லை எனவே அடுத்த வழக்குத் தவணையின் போது குற்றப் பலனாய்வுப் பிரிவு பணிப்பாளரை நீதிமன்றில் தோன்றுமாறு நீதவான் எஸ்.சதீஸ்தரன் கட்டளை பிறப்பித்தார்.

Related posts: