யாழ் – பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்!
Wednesday, July 28th, 2021யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28.07.2021) காலையில், அவரின் தங்குமிடத்திலுள்ள படுக்கையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அநுராதபுரத்தை சேர்ந்த 45 வயதுடைய சார்ஜண்ட் ஜயசேகர (45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு கடமையை முடித்து விட்டு யாழ், பண்ணையிலுள்ள பொலிஸ் தங்குமிடத்திற்கு சென்று உறக்கத்திற்கு சென்றார்.
பின்னர், இன்று காலையில் கடமைக்கு செல்வதற்காக காலை 5.30 மணியளவில் சக பொலிஸ் உத்தியோகத்தர்களால் தட்டியெழுப்ப முயன்ற போது, அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!
ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் - போக்குவரத்து அமைச்சர்!
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
|
|