யாழ்.பொதுநூலகத்தில் போக்குவரத்து விதி முறைகள் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு!

Thursday, June 23rd, 2016
வடமாகாணப்  போக்குவரத்து அமைச்சு,மற்றும் இலங்கை மோட்டார் போக்குவரத்துத்  திணைக்களத்தின் ஏற்பாட்டில் “போக்குவரத்து விதி முறைகள் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுத்தல்” தொடர்பான அரச தனியார் போக்குவரத்துத்துத் துறைச்  சாரதி,நடத்துனர்களுக்கான  பயிற்சிச்  செயலமர்வு இன்று வியாழக்கிழமை(23) காலை முதல் யாழ். பொது நூலகத்தின்  கேட்போர் கூடத்தில் வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றன.
இந்தச் செயலமர்வில் வடமாகாணப்  போக்குவரத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் பிரதம அதிதியாகக்  கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தப் பயிற்சிச் செயலமர்வில் போக்குவரத்து வாகன ஒழுங்கு முறையும், விபத்துக்களைத் தடுத்தலும், சிறந்த போக்குவரத்து சேவையை எற்படுத்தலும்,பிரயாணிகளின் எதிர்பார்ப்பு , வீதிக் குறியீடுகளும் ஆரம்பப்  பொறிமுறைகளும், வாகனப் பராமரிப்பும் பொதுசன உறவும் ஆகிய தலைப்புக்களில் விரிவுரைகள் ஆற்றப்பட்டதுடன் செய்முறைப் பயிற்சியும் இடம்பெற்றன.
இந்தச் செயலமர்வின் வளவாளர்களாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பயிற்சிப் பாடசாலை அதிபர் சி.போ.வரதராஜன், ஓய்வு பெற்ற மோட்டார் போக்குவரத்துத்  திணைக்கள உதவி ஆணையாளர் வ.பத்மநாதன்,
 இலங்கை போக்குவரத்துச் சபையின்  பயிற்சிப் பாடசாலை வளவாளர் ஆ.ஜேசுதாசன் மற்றும் அரச,மற்றும் தனியார் போக்குவரத்துத்துறை சாரதிகள் , நடத்துனர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: