யாழ்.பொதுநூலகத்தில் கம்பீரத்துடன் அப்துல் கலாம்!
Friday, June 17th, 2016யாழ்ப்பாண பொதுநூலகத்தில் மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது..
டாக்டர் அப்துல் கலாம் 2012 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்ததை நினைவுகூரும் முகமாக அவரது உருவச்சிலை யாழ்.நூல் நிலையத்தின் இந்தியன் கோர்னர் பகுதியில் இன்றையதினம் (17) திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த உருவச்சிலை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு யாழ் பொதுநூலகத்தில் திரைநீக்கம் செய்யப்பட்டிரந்தது.
தமிழகம் இராமேஸ்வரத்தில் 1931 ஒக்ரோபர் 15 ஆம் திகதி பிறந்த டாக்டர் அப்துல் கலாம் 2015 ஜுலை 27 ஆம் திகதி 84 வயதில் உயிர்நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். குடாநாட்டின் சிலஇடங்களில் நாளை மின்தடை !
தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு - தடுத்துநிறுத்தக் கோருகிறது வ...
ஜனாதிபதி ரணிலின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் சிறப்பாக உள்ளன - ஜப்பானிய வெளியுறவுத்த...
|
|