யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய 11 ஆம் இலக்கச் சந்தேகநபர் !

vithya Wednesday, February 22nd, 2017

யாழ்.புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம்-08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் இன்று புதன்கிழமை(22) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களிலும் 11 ஆம் இலக்கச் சந்தேகநபர் அரச தரப்புச் சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் தெரிவித்துள்ளார். அரச தரப்புச் சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய 11 ஆம் இலக்கச் சந்தேகநபர் அரச தரப்புச் சாட்சியாளராக மாறுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
vithya