யாழ். பல்கலை: வெளிவாரிப்பட்ட படிப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்!

Monday, January 30th, 2017

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது  வெளிவாரிப்பட்ட படிப்பு மற்றும் தொலைக் கல்வி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 34 ஆவது பட்டமளிப்பு வைபவமான இந்த பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று காலை பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் இந்த பட்டதாரிகளுக்கான பதக்கங்களை அணிவித்து வைத்தார். இந்த நிகழ்வில் பட்டதாரிகளாக தெரிவான 450 வெளிவாரி மற்றும் தொலைக் கல்வி பட்டங்களை பெற்ற பட்டதாரிகளுக்கே இந்த பட்டப்படிப்பின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

hj

Related posts: