யாழ்.பல்கலை மாணவர் படுகொலை: ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
Saturday, December 31st, 2016
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் யாழ்.பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை(30) யாழ்.நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது பொலிஸார் தமது மேலதிக அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்ததுடன், சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்துச் சந்தேகநபர்களை எதிர்வரும்-13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
Related posts:
இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி - நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!
இறுக்கமான நடைமுறையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை - மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை என சி...
இலங்கை - பாகிஸ்தான் வர்த்தகத் தொடர்பை மேலும் விரிவுபடுத்த அமைச்சர் பந்துல தலைமையிலான விசேட குழு பாகி...
|
|