யாழ்.பல்கலை பொறியியல் பீடம் 26ஆம் திகதிமுதல் ஆரம்பம் – பதிவாளர் அறிவிப்பு!

Sunday, August 23rd, 2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் மற்றும் இறுதி வருட மாணவர்களுக்கான கற்கைகள் யாவும் எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமைமுதல் வழமைக்குத் திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, அறிவியல் நகர் வளாகத்தில் உள்ள பொறியியல் பீடத்தின் மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் உள்ளிட்ட கல்விசார் நடவடிக்கைகள் வரும் புதன்கிழமைமுதல் இடம்பெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

விடுதி வழங்கப்பட்ட மாணவர்கள் வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தந்தமது விடுதிக்கு அறிக்கையிடல் வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

Related posts: