யாழ். பல்கலை புதன்கிழமை திறக்கப்படும்!

Monday, July 18th, 2016

மாணவர்களுக்கிடையே எற்பட்ட மோதல் நிலைமையால் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது எதிர்வரும் புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இங்கு ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து காலவரையரையின்றி பல்கலைக்கழகத்தினை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும், இது தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இரண்டு தரப்பினருக்குமிடையில் இதுபோன்ற முறுகல் நிலை இனி ஏற்படாது என பல்கலைக்கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தீர்வுக்கு வந்துள்ளதாகவும், இதற்கமையவே புதன்கிழமை இதனை மீண்டும் திறக்க முடிவு எடுத்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: