யாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம்: விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம்!

Thursday, February 13th, 2020

யாழ்.பல்கலைகழக- கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த வாரம் பல்கலைக்கழக நிர்வா கத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து பொலிஸாரும் , பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், கணினி குற்றவியல் விசாரணை பிரிவின் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கின்றது.

இதற்கமைய, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கைத்தொலைபேசிகளை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை சம்பவம் தொடர்பில் இதுவரை 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வகுப்புத்தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: