யாழ். பல்கலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்!
Wednesday, July 20th, 2016அண்மையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
மருத்துவ பீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் ஆகிவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
கலைப்பீடம், சித்திரமும் வடிவமைப்பும், நடனம், இசைத்துறைகளின் பரீட்சைகள் திட்டமிடப்பட்டவாறு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் என பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.
இதனையடுத்து பல்கலைக்கழக்தின் கல்வி நடவடிக்கைகள் முழு அளவில் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தேர்வு செய்யப்பட்ட 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!
நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் - அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவிப...
|
|
வடக்கு ஆசிரியர்களுக்கு மேலதிகமாக பணிச் சுமை - கல்வித் திணைக்களத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங...
அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் – திகதியை நிர்ணயிக்க ...
சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜுலை மாதத்த...