யாழ் பல்கலையில் மோதல்: மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

1_42 Friday, January 12th, 2018

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே நேற்று(11) இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.