யாழ். பல்கலையில் புதிய கட்டடத் தொகுதி !

Jaffna-Univ-Kilinochchi-Faculties-Opening-1 Thursday, December 7th, 2017

யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் ஆய்வு மற்றும் பயிற்சிக் கட்டடத் தொகுதி ஒன்று அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு சமீபத்தில் இடம்பெற்றது.

உயர்கல்வி அமைச்சின் செயலாளர் டி.கே.திசாநாயக்கா, ஜப்பானிய தூதரக மேலதிகாரி கோ.ஜி யாகி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாகப் பங்கேற்றனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்தில் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் மூலமாக 220 கோடி ரூபா நிதிஉதவியில் இக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.

இப்புதிய கட்டடத் தொகுதியானது ஆய்வுகூடங்கள், விரிவுரை மண்டபங்கள், தாவர மற்றும் விலங்குப் பண்ணைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.


கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!
தொற்றா நோயினை இல்லாதொழித்தல் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி!
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம்:  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
கண்ணிவெடிகளை அகற்ற 190 மில்லியன்!
உள்ளூராட்சி தேர்தலை அரசு அறிவித்திருப்பதுபோல் குறித்த காலத்தில் நடத்த வேண்டும் -  ஊடக சந்திப்பில் ஈ....
2018-01-18 09.41.30

வீணைச் சின்னம் என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான சின்னம்!…