யாழ். பல்கலையின் நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால் முடக்கம் !

Monday, October 31st, 2016

இரண்டு மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று பல்கலைகழகத்தின் நிர்வாக செய்பாடுகளை மாணவர்கள் முடக்கியுள்ளனர்.

மாணவர்களின் மரணத்திற்கு  நீதிகோரி யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்பட்டு கல்வி செயற்பாடுள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் தொடக்கம் நிர்வாக செயற்பாடுகளையும் முடக்குங்கள் எனகோரியே இந்த போராட்டம் தினம் காலை 7.30 மணி தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு மாணவர்கள் எதிர்ப்பை காட்டி வரும் நிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியாத நிலையில் உள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: