யாழ். பல்கலையின் கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கலைப்பீட 3ம் 4ம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமுலுக்கும் நீக்கவும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
18.01.2018இலிருந்து அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் என யாழ் பல்கலைக்கழக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் 4ம் வருட மாணவர்களுக்கு இடையேஏற்பட்ட மோதல் காரணமாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியல்வாதிகளை மோசமாக விமர்சித்த ஜனாதிபதி மைத்திரி!
கண்டாவளை பிரதேச செயலகத்தில் பழமரக்கன்று விநியோக ஆரம்ப நிகழ்வு!
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!
|
|