யாழ்.பல்கலையின் கற்றல் நடவடிக்கைகள் 22 ம் திகதி ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என பல்கலைக்கழக பதிவாளரினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்பீடம் விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம், சித்த மருத்துவ அலகு என்பனவற்றின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி வழங்கப்பட்ட மாணவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் விடுதிக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதேவேளை, மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களின் மாணவர்களின் பிற்போடப்பட்டிருந்த பரீட்சைகள் யாவும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்றும் பதிவாளரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : காப்பெற் வீதியாக மாற்றம் பெறுகிறது வேலணை சிற்பனை வீதி !
இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
வாக்காளர் இடாப்பில் பிரச்சினையா? - முறையீடு செய்யுமாறு அறிவிப்பு!
|
|