யாழ்.பல்கலைக் கழக மோதல் சம்பவம் குறித்து  உயர்மட்டக் கலந்துரையாடல்!

Tuesday, July 19th, 2016

கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான பீட தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான  உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை(19) பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா,  மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறைப்  பிரதி அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் ஆகியோருடன் மாணவர்களும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வௌியிட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம்,

எதிர்வரும் காலங்களில் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளைச் சீராக முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற விடயங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கருத்துப் பரிமாறப்பட்டது.

மேலும் இந்த மோதல் சம்பவம் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு இனவாத சம்பவமல்ல என்பதையும், ஒரு சிலரினால் மேற்கொள்ளப்பட்டதே என்பதையும் கொழும்பிலிருந்து  வருகை தந்த அமைச்சர்கள் குழுவினர் விளங்கிக் ​கொண்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில் நாளைய தினம் முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

Related posts:

கொரோனாவை போன்று டெங்கு நோயையும் இல்லாதொழிக்க விஷேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – சுகாதார அமைச்சர் உ...
பொது சுகாதார விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எச்சரிக்கை!
ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து அரச அலுவலர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் - பொது சு...