யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Saturday, November 12th, 2016

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் -சிங்கள மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம்- 08 ஆம் திகதி வரை ஒத்திவைத்து யாழ். நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை(11) முன்னெடுக்கப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்தார்.

மோதல் சம்பவத்தில் காயமடைந்த சிங்கள மாணவன் தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமையாலேயே வழக்கு விசாரணை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த யூலை மாதம்-16 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது தமிழ், சிங்கள மாணவர்களுகிடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.

இதன் போது காயமடைந்த சிங்கள மாணவனொருவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பிலான வழக்கு விசாரணை மருத்துவ அறிக்கையினை எதிர்பார்த்து ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1276457 copy

Related posts: