யாழ். பல்கலைக்கு விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதி – அமைச்சர் கயந்த கருணா திலக!
Wednesday, November 30th, 2016யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதி அமைக்கப்படவிருப்பதாக பாராளுமன்ற மறு சீர மைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணா திலக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களைஅறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
JICA அமைப்பினால் இதற்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அதற்கான வேலைத்திட்டத்தின் ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட ஆலோசனை கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார் .
Related posts:
எழுதாரகைப் படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை!
எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை – அமைச்சர் மகிந்த அமர...
ஒரே நாளில் யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபச் மரணம்!
|
|