யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை: ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு!

Friday, January 13th, 2017

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினது படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளையும் இந்த மாதம்- 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு  இன்று  வெள்ளிக்கிழமை(13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் -20 ஆம் திகதி பொலிஸாரினால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் இருவர் பலியாகியிருந்தனர். குறித்த சம்பவத்தில் மாணவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என மாணவர்களின் பிரேத பரிசோதனைகளிலிருந்து தெரியவந்தது.

இவ்வாறான நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffna-Police-News-03

Related posts: