யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் – ஒன்பது பேர் வைத்தியசாலையில்!

Thursday, July 25th, 2019

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில் தொழில்நுட்பப்பிரிவின் முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: