யாழ் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் பதவியேற்பு!

Monday, May 1st, 2017

யாழ்.பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் விக்னேஷ்வரன் இன்றைய தினம் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்தே குறித்த  பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

அண்மையில் யாழ்.பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. இதில் பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் சற்குணராசா மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதனடிப்படையில் இறுதி தீர்மானத்தை ஐனாதிபதியே எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில், பேராசிரியர் விக்னேஸ்வரன் யாழ்.பல்கலைக்கழகத்தின் 8வது துணைவேந்தராக கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்து துணைவேந்தருக்கான பொறுப்புக்களை அவர் பெற்றுகொண்டார்.

Related posts: