யாழ்.பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

Sunday, July 17th, 2016

யாழ்.பல்கலைகழத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான மோதலையடுத்து வவுனியா வளாகம் உள்ளிட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்பட்டிருந்த முதலாம் வருட மாணவர்களுக்குகான வரவேற்ப்பு நிகழ்வில் வழமைக்கு மாறான முறையில் கண்டிய நடணத்தை நடத்தமுற்பட்டதையடுத்து தமிழ் சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்ப்பட்டு பாரிய கலவரமாக உருப்பெற்றிருந்தது. குறித்த சம்பவத்தை தொடர்ந்தே வவுனியா வளாகம் உள்ளிட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தையடுத்து இன்றையதினம்(17) யாழ் பல்கலைகழகத்தில் விஷேட பேரவைக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இக் கூட்டத்தின் ஊடாக யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல் பல்கலைகழக பதிவாளரால் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளர்களும், மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல்விசார் நடைவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதுடன் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன் பல்கலைக்கழத்தின் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

13754164_1063210630433973_1937507893352129331_n

13776029_1063210777100625_5235622810947999617_n

bc617d73-44c5-4f6b-adbf-6ee35947147a

13680512_1063211040433932_1900568970394243444_n

13731714_1063211100433926_6826025499146106963_n

13680497_1063211140433922_9145055373702404372_n

13669735_1063211007100602_3426861346442144553_n

Untitled-5 copy

13731744_1063472250407811_1667818380804949898_n

Related posts: