யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான அறிவித்தல்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014,2015 கல்வியாண்டுக்கான முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக் கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
மேற்படி கல்வியாண்டுக்கான விடுதி மாணவர்கள் நாளை மறுதினம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விடுதிகளுக்குத் திரும்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்பீடத்தில் சட்டத் துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்கள் தவிர்ந்த ஏனைய துறைகளைச் சார்ந்த மூன்றாம், நான்காம் வருட மாணவர்கள் விடுதி உட்பட பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் பதிவாளர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தீர்மானமில்லை - அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
யாழ்.மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி!
வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவு!
|
|