யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகப் பெண் ஊழியரொருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ள நிலையில் குறித்த நிர்வாக அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் கடந்த வெள்ளிக்கிழமை(07) பல்கலை க்கழக ஊழியர் சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகி ஷ்கரிப்புப் போராட்டம் இன்று பிற்பகல்-01.30 மணியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று முற்பகல்-11.30 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பொதுச் சபை பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதெனத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும்- 30 ஆம் திகதி இடம்பெறும் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தின் போது குறித்த பிரச்சினைக்குத் தீர்க்கமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் இல்லாவிடில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதெனவும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஊர்காவற்றுறை படுகொலை தொடர்பில் இரத்த மாதிரி பரிசோதனை!
கொழும்புத் துறைமுக கடற்கரையோரத்தில் எண்ணெய்ப் படலம்!
2 இலட்சம் சிமெந்து மூடைகள் இலங்கை வருகை - சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
|
|