யாழ் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்கேற்பு!
Friday, October 28th, 2022யாழ். பல்கலைக்கழக இன்றைய ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்குபற்றியுள்ளார்.
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிற “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்,
யாழ்ப்பாண பல்கலைக்கழுக்கு வருகை தந்த முதல் பெண்மணியை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குண ராஜா வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி!
தொடரும் சீரற்ற வானிலை : டெங்கு நோய் பரவும் அபாயம் என எச்சரிக்கிறது தேசிய நோய் தடுப்பு பணியகம்!
வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் - சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ...
|
|