யாழ். பல்கலைக்கழக அடுத்த துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றாகும்!
Tuesday, June 9th, 2020ஒரு வருடத்துக்கு மேல் வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய நடைமுறைகளின் பிரகாரம் கோரப்பட்ட விண்ணப்பத்துக்கான முடிவு நாள் இன்றாகும்.
இது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நேற்று மாலைவரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர்கள் மூன்று பேரும், வெளியிலிருந்து இரண்டு பேருமாக ஐந்து பேரின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் விண்ணப்ப முடிவுத் திகதியான இன்றும் ஓரிரண்டு விண்ணப்பங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் சுகாதார பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கிவைப்பு!
இந்திய பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் பரிசு!
ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் - பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவு!
|
|