யாழ். பல்கலைக்கழகத்தில் போராடும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் எதிரொலி: கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு!
Wednesday, November 1st, 2017தமது வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் மூன்று அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒட்டுமொத்த அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காலவரையற்ற கதைவடைப்புப் போராட்டத்தில் குதித்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ். பல்கலைக்கழக முன்றலில் இன்று புதன்கிழமை (01) பிற்பகல்-03 மணி முதல் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை இன்று பிற்பகல் நான்கு மணிக்கு முன்னர் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தரால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தோல்வியடையும் என அவரால் நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் குறித்த போராட்டம் முக்கியம் பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|