யாழ் பல்கலைக்கழகத்தின் பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது!

Thursday, November 19th, 2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட உள்ளக விளையாட்டு அரங்கு இன்று (19) திறந்து வைக்கப்பட்டது.

கொரோனா நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் திறப்பு விழா இடம்பெற்றது.

பல்கலைக்கழக உடற்கல்விப் பணிப்பாளர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விருந்தினராகக் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் கல்வெட்டைத் திறந்து வைக்க, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா உள்ளக விளையாட்டரங்கைத் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: