யாழ் பண்ணைப் பகுதியில் எலும்புக்கூடு மீட்பு – தீவிர விசாரணையில் பொலிஸார்!

Friday, August 14th, 2020

யாழ்ப்பாணம் கொட்டடி மீனாட்சிபுரம் பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் வளாகத்தில் இருந்து எலும்புக் கூடு மற்றும் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது – குறித்த வளாகத்தில் கூடாரம் ஒன்று அமைப்பதற்காக இன்று காலை குழி தோண்டிய போது அந்த குழியில் எலும்பு கூடுகள் மற்றும் பெண்ணின் ஆடைகள் காணப்பட்டுள்ளன.

அவற்றைக் கண்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், யாழ். மாநகர சுகாதார பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அந்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மற்றும் யாழ். பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதுடன், எலும்பு கூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் ஆடைகள் மற்றும் பற்பசை ,சாறி, பிளவுஸ், உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே குறித்த பகுதியில், 2006 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: