யாழ். பண்ணைக்  கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி! 

Thursday, August 24th, 2017
யாழ். பண்ணைக்  கடற்பகுதியில் இன்று  பிற்பகல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
இன்றைய தினம் யாழ். குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தின் போது நால்வர் கடலுக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கினர்.  அவர்களில் இருவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் இவர்களில் ஒரவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில்  நாவான்துறையைச் சேர்ந்த குயின்சன் என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். மேலும் காணாமல் போன மற்றுமொரு நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குத் தற்போது பொலிஸார்விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: