யாழ். நீதிமன்றக் கட்டத் தொகுதி தாக்குதல் வழக்கு ஒத்தி வைப்பு!

யாழ். நீதிமன்றக் கட்டத் தொகுதி மீது கடந்த வருடம் மே மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை(13-06-2016) யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இரு பிரிவுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 70 இற்கும் மேற்பட்டவர்கள் மீது நீதிமன்றின் மீது தாக்குதல் நடத்தியமை சிறைச்சாலை வாகனத்தைச் சேதப்படுத்தியமை சட்டவிரோதமாக இளைஞர்கள் கூடியமை எனும் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகிறது.
இதன்போது குறித்த வழக்கிற்குச் சமூகமளிக்காதிருந்த சந்தேகநபர் ஒரு நபருக்குப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மேற்படி வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி வரையும் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடியமை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் தொடர்பான வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் -09 திகதி வரைக்கும் ஒத்திவைத்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம்- 20ம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த முற்பட்ட போது நீதிமன்ற வளாகத்தின் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டனர். இதனுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு 130இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|