யாழ் நகர பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு – பொலிசார் தீவிர விசாரணை முன்னெடுப்பு!

Saturday, August 13th, 2022

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியை சேர்ந்த எம்.லக்ஸ்சாந்தன் (வயது 34) என்பவர் மீதே வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது கடையை மூடிய பின்னர், காங்கேசன்துறை வீதி ஊடாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மனோகரா திரையரங்குக்கு அருகில் வைத்து வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்பகை காரணமாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: