யாழ்.நகர அபிவிருத்தியில் பூங்காக்களும் உருவாகும்!

Wednesday, October 19th, 2016

யாழ்.நகர அபிவிருத்தி திட்டத்தில் பொதுமக்களை கவரும் வகையிலான பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது:

நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முற்றவெளிப் பிரதேசம் திறந்த வெளிப் பிரதேசமாகவே சீரமைக்கப்படும். சுப்பிரமணிய பூங்கா, பண்ணைக் கடற்கரையை அண்டிய பூங்கா என்பன திறந்த வெளிப் பூங்காக்களாக அழகுபடுத்தப்படும். சுப்பிரமணியம் பூங்காவைச் சுற்றிய பாதுகாப்பு மதில்கள் அகற்றப்பட்டு திறந்த பூங்காவாக அழகுபடுத்தப்படவுள்ளது. அதனைவிட முற்றவெளிப் பிரதேசமும் திறந்த வெளியாக அழகுபடுத்தப்படும் – என்றார்.

54557762

Related posts: