யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்து – சிறுவன் உயிரிழப்பு!

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த அஅஜித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.
முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பயணித்த சிறுவன் , வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் அறிந்து யாழ்ப்பாண பொலிஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
000
Related posts:
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தாக்கம் செலுத்தும் யாழ்ப்பாணம்!
சவர்க்காரத்திற்குள் கஞ்சா - மாட்டினார் குடும்பப் பெண்!
மின் கட்டண நிவாரணம் தொடர்பில் அடுத்தவாரம் அறிவிக்கப்படும் - இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
|
|